2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஏழாலையிலுள்ள வீடொன்றில் நகைகளும் பணமும் திருட்டு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். ஏழாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகளும் பணமும் உட்பட பெறுமதியான பொருட்களும் திருடிச்செல்லப்பட்டுள்ளன. 

இவ்வீட்டிலுள்ளவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் ஜன்னல் வழியாக உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த  தங்கநகைககளும் பணமும் உட்பட பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.

இதன்போது 09 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளும் 10,000 ரூபா பணமும் உட்பட பெறுமதியான பொருட்களும் திருடிச்செல்லப்பட்டுள்ளன.

வீட்டிலுள்ளவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்துபார்த்தபோது, வீட்டு முற்றத்தில் தோடு ஒன்று வீழ்ந்திருப்பதைக் கண்டெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளை தேடியபோதே தமது வீட்டில் திருட்டு  இடம்பெற்றமை இவர்களுக்கு தெரியவந்தது.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில்  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்  முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில்,  இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .