2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உரும்பிராயில் சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். உரும்பிராய் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சிசுவொன்றின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

உரைப்பையில் இடப்பட்டு கட்டப்பட்டவாறு  இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசத்தைச்  சேர்ந்த இருவர் அங்குள்ள பற்றையொன்றினுள் குழிதோண்டிக்கொண்டிருப்பதை  ஒருவர் அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் சந்தேகமடைந்த மேற்படி நபர், அயலவர்களின் உதவியுடன்  குறித்த  பற்றைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது குறித்த பற்றையினுள்  குழி தோண்டப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட பொதியொன்று போடப்பட்டிருந்ததை கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  கிராம அலுவலகர் மூலமாக  கோப்பாய் பொலிஸாருக்கு அயலவர்கள் தகவல் வழங்கினர்.

இந்த நிலையில், குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் குழியில் கிடந்த உரைப்பை பொதியை அவிழ்த்துப் பார்த்தபோது அதனுள் சிசுவின் சடலமொன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .