2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பட்டதாரி பயிலுநர்கள் போராட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.கிருஷ்ணன்

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக பட்டதாரிப் பயிலுநர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (24) ஈடுபட்டுள்ளனர்.

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 150 இற்கும் மேற்பட்டவர்களே இந்தப் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக பிரிவுகளில் கால்நடை, விவசாயம், பொருளாதார அபிவிருத்தி சார்ந்த துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 1083 பட்டதாரி பயிலுநர்களுக்கு கடந்த 15 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கியுள்ள போதும், தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 

'எங்களது நிரந்த நியமனம் தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட போது, நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கூறுகின்றார்களே தவிர, அதனை நடைமுறைப்படுத்துகின்றார்களே இல்லை. இதனைக் கண்டித்தே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்'  என்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .