2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


சட்டவிரோதமாக உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றிச் சென்ற மூவர் நேற்று (23) கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீனிக ஜெயக்கொடி தெரிவித்தார்.

இருந்தும் அவர்களது உழவு இயந்திரங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை எதிர்வரும் 26ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோப்பாய், திருநெல்வேலி, கல்வியங்காடு ஆகிய பிரதேசங்களில் வைத்தே இந்த உழவு இயந்திரங்கள் நேற்று (23) கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .