2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மனைவி கொலை: கணவனுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மனைவியை எரித்து கொலை செய்த கணவனை எதிர்வரும் ஜனவரி, 6 ஆம் திகதி வரையும் விளக்கமறியில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

வடமராட்சி, மணற்காடு குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர், தனது மனைவியான ஞானதாஸ் மேரிஜெமில்ட் (24) என்பவரை இம்மாதம் 3 ஆம் திகதி எரியூற்றியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அப் பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது, கணவனை கைதுசெய்த பருத்தித்துறைப் பொலிஸார் அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்; பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்தார்.

இதனையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கணவனை மீண்டும் நேற்று (24) கைது செய்த பருத்தித்துறைப் பொலிஸார், பருத்தித்துறை நீதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று (25) ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போதே அவரை  ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .