2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மதுபானம் விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை  பருத்தித்துறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளடன், அவரிடமிருந்து மதுபானத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

யாழ். மருதங்கேணியில் உள்ள உணவகம் ஒன்றின்  உரிமையாளரையே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர் தனது உணவகத்தில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம்  விற்பனை செய்துகொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 30 சிறிய மதுபானப்; போத்தல்களையும்  02 பெரிய மதுபானப் போத்தல்களையும்  26 மதுபான ரின்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து  உணவகத்திற்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.தனபால தலைமையிலான குழுவினரே சந்தேக  நபரைக் கைதுசெய்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .