2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

உடுவிலுக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் இல்லை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் கல்விக்கோட்டம் கடந்த இரண்டு வருடங்களாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் இல்லாமல் இயங்கி வருகின்றது.

இந்தக் கோட்டத்தின் கீழ் 35இற்கும் மேற்பட்ட பாடசாலைகளும், வலி. வடக்கு கல்விக் கோட்டத்திலிருந்து இடம்பெயர்;ந்து இயங்கும் பாடசாலைகளும் இருக்கின்றன.

கோட்டக் கல்விப் பணிப்பாளரை நியமிக்காதது தொடர்பில் வலிகாமம் கல்விப் பணிமனையினைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'உடுவில் கல்விக் கோட்டத்திற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வு முடிவடைந்துள்ளது.

இருந்தும் வடமாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இதுவரையிலும் எடுக்கவில்லை' எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து இது தொடர்பாக வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'வெற்றிடங்கள் உள்ள பதவிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களை நியமிக்கும்படி கல்விப் பணிமனைகளுக்கு பணித்துள்ளதாகவும்' அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .