2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர் இல்ல சிறுவன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி 'காந்தி' சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவன் உடல்நலக் குறைவினால் திடீரென இன்று (26) உயிரிழந்துள்ளார்.

பெற்றோரை இழந்த சிறுவர்கள் பலர் காந்தி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மேற்படி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இராஜேஸ்வரன் (7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சிறுவனது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் சடலம் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக சிறுவர் இல்லத்தின் தலைவர் தி.இராசநாயகம் கருத்து தெரிவிக்கையில், 'உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுவனுக்கு 3 இலட்சம் ரூபாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்த போதும், அந்தச் சிறுவனுடைய நோய் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையிலே இச்சிறுவன் இன்று (26) உயிரிழந்துள்ளான்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .