2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வடமராட்சியில் இளைஞன் கடத்தல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம், வடமராட்சி வடக்கினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (26) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு இன்பரூட்டி என்னும் இடத்தினைச் சேர்ந்த சூரியகுமரன் கலையமுதன் (வயது 23) என்ற இளைஞரே இன்று (26) அதிகாலை 4 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார் என்று அவ்விளைஞனின் இளைஞனின் தந்தை, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி இளைஞன் கடத்தப்படும் போது 'தன்னை 4பேர் கொண்ட கும்பல் ஒன்று வானில் கடத்திச் செல்வதாக' அவரது தொலைபேசிக்கு அவ்விளைஞன் குறுந்தகவல் அனுப்பியதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .