2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஈ.பி.டி.பி.க்கு களங்கம் ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை: டக்ளஸ்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்ட வேண்டுகோளை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், 'ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பெயரை அக்கட்சி சார்ந்தவர்கள் அல்லது, கட்சி சாராதவர்கள் அநாமதேயமாக பாவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், 'அவ்வாறு எமது கட்சியின் பெயரைப் தவறாகப் பயன்படுத்தி ஏதாவது செயற்பாடுகள் செய்தால் அவ்வாறான விடயங்களில் தான் தலையிட மாட்டேன். இதுவரையில் நடைபெற்ற பல சம்பவங்களிலும் தான் தலையிடவில்லை' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • aj Thursday, 26 December 2013 01:28 PM

    எல்லாவற்றுக்கும் முதலில் உங்களிடம் இருக்கும் ஆயுதங்களை களைந்தால் நன்றாக இருக்கும். வடக்கில் நடந்த பல கொலைக்களுக்கு யார் என்ற உண்மை மக்களுக்கு இப்போது சரி தெரிந்து இருக்கும்.

    Reply : 0       0

    vALLARASU.COM Friday, 27 December 2013 08:46 AM

    ஒருவருக்கு ஒரு கட்சி... டக்லஸ் கட்சி, மனோ கட்சி, ரங்கா கட்சி, விமல் வீரவன்ச கட்சி, றிசாட் கட்சி, அதாவுல்லா கட்சி, ஆசாத் சாலி கட்சி, பிள்ளையான் கட்சி, மிலிந்த மொரகொட கட்சி.... இன்னும் எத்தனையோ மக்களுக்கு தெரியாத கட்சிகள் உள்ளதோ தெரியாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .