2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழ். இந்து ஆலயங்களை புனரமைக்க நிதி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் யாழ். மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு 61 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (26) மதியம் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் 61 ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு ஆலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் இந்நிதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாரம்பரிய மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஆலயங்களின் பரிபாலன சபையினரிடம் மேற்படி காசோலைகளை வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .