2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கிராம அலுவலர் வீட்டின் மீது இரண்டாவது தடவையாக கல்வீச்சு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் பிரதேச செயலக கிராம அலுவலர் ஒருவரின் வீட்டிற்கு இனம்தெரியாத நபர்கள் இரண்டாவது தடவையாகக் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இணுவில் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மேற்படி கிராம அலுவரின் வீட்டிற்கே நேற்று (25) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் மேற்படி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இது தொடர்பாக கிராம அலுவலரினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் குறித்த கிராம அலுவலர் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .