2025 ஜூன் 25, புதன்கிழமை

சின்ன வெங்காயம் விலையேற்றம்; செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 02 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். மாவட்டச் சந்தைகளில் சின்ன வெங்காயம் 180 தொடக்கம் 200 ரூபாவிற்கு வரையும் விற்பனை செய்யப்படுவதினால் சின்ன வெங்காயச் செய்கையில் தற்போது விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் பருவமழை இம்முறை பொய்த்துப் போயுள்ளபோதும், விவசாயிகள் கிணற்று நீரினை நம்பி விவசாயச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தின் இடைக்காடு, குட்டியப்புலம், வசாவிளான், வளளாய், தம்பசிட்டி, அச்சுவேலி, புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் தற்போது சின்ன வெங்காயச் செய்யை அமோக அளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.

எதிர்பார்த்தபடி மழை கிடைக்காமை மற்றும் வெங்காயப் பயிர்களுக்குத் தொற்றிய நோய்கள் காரணமாக 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்தது. இதனால் ஏற்பட்ட விலையேற்றம் தொடர்ந்து நீடித்த வண்ணம் இருக்கின்றன.

தற்போது சந்தையில் ஏற்படும் கேள்விக்கு ஏற்றாற் போல் சின்ன வெங்காயத்தின் நிரம்பல் இல்லாமையினால் விலை அதிகரித்துக் காணப்படுவதாகவும், இதனால் மரக்கறி வகைகளைப் பயிரிடுவதினையும் விட சின்ன வெங்காயம் பயிரிடுவதில் தாங்கள் ஆர்வம் காட்டுவதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .