2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஈவினைப் பகுதியிலுள்ள கள்ளுத் தவறணையை அகற்றக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 03 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். ஈவினை கிழக்கு இந்து மயானத்திற்கு அருகிலுள்ள  கள்ளுத் தவறணையை அகற்றுமாறு இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வலி. தெற்கு உடுவில் பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஷப்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈவினை கிழக்கு இந்து மயானத்திற்கு அருகில் கடந்த 20 வருடங்களுக்கும்  மேலாக குறித்த கள்ளுத் தவறணை இயங்கிவருகின்றது.

தற்போது இப்பகுதியில் மீள்குடியேற்றம் அதிகரித்துள்ளமையால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கள்ளுத்தவறணை இயங்குவதனால் அப்பகுதி மக்கள் பல பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால், குறித்த கள்ளுத் தவறணையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .