2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முதிரை மரங்களைக் கடத்தியவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் காட்டுப் பகுதியிலிருந்து சுமார் 2 இலட்சம் பெறுமதியான முதிரை மரங்களை டிப்பர் வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கடத்திய நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்படி டிப்பர் வாகனத்தினைச் சோதனை செய்த போதே, இவ்வாறு சட்டவிரோதமாக காட்டு மரங்கள் கடத்தி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

மரக்குற்றிகளுடனான டிப்பர் வாகனம் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .