2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆடுகளைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

ஆடுகளைத் திருடினர் என்ற சந்தேகத்தில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்குமார் கடந்த 3ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

தங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்தனர்.

இந்நிலையில், யாழ். காரைநகர் பிரதேசத்தில் பரவலாக ஆடுகள் திருடப்படுவதாக ஊர்காவற்றுறை மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையங்களிலும் காரைநகர் பிரதேச செயலகத்திலும் ஆடுகளை வளர்ப்போர் நேற்று சனிக்கிழமை முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதுவரையிலும் தங்களுடைய 10 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக ஆடுகளை வளர்ப்போர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

ஆடுகளை வளர்ப்போர் புற்றரைகளில் மேய்ச்சலுக்காக ஆடுகளை கட்டிவைத்திருக்கும்போது, மோட்டார் சைக்கிள்களில் வரும் சிலர் ஆடுகளைத் திருடிச் செல்வதாகவும்  அந்த முறைப்பாடுகளில்; தெரிவித்துள்ளனர்.

காரைநகர்  பிரதேசத்திலுள்ள  மக்கள் அதிகளவில் ஆடுகளை வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு  ஆடுகள் திருட்டுப் போவதினால் தாங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .