2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவே ஒரே தீர்வு'

Menaka Mookandi   / 2014 ஜனவரி 05 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களினது பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு ஜனாதிபதி ஆணைக்குழுவே' என பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழுவினர் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை புத்தளம், ரத்மல்யாய பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவ்அமைப்பின் இணைத்தலைவர்களான எஸ்.எச்.எம். அப்துல் மகீன், யாழவன் நசீர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

'1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு சகல துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உள பாதிப்புக்களை அடைந்துள்ளனர். எனவே இவ்விடயங்களை ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு இன்றி வட மாகாண முஸ்லிம்களது எந்த விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது' என்றனர்.

'சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கவென முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதற்கிடையில் ஜனாதிபதி தேர்தல் வந்ததினால் அதன் பின் அம்முயற்சிகள் கை விடப்பட்டுள்ளன' என்று கூறினர்.

'எனவே ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வலியுறுத்தி பத்தாயிரம் கையொப்பங்களினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம்கள் அமைப்புக்களுடன் இணைந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது' என்று குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .