2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்கள் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 05 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்களுக்கும் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (05) காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாணத்தில் உடற்கல்வி பாடத்துறை சம்பந்தமான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இச்சந்திப்பில், வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா பட்டதாரிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், 'யாழ்., மாவட்டம் மட்டுமல்லாது வடமாகாண பாடசாலை மாணவர்கள் அனைவரையும் கல்வியிலும் விளையாட்டிலும் பங்கெடுக்கச் செய்து அவர்கள் ஆரோக்கியமுள்ள சமூகமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்' என கேட்;டுக்கொண்டார்.

இச்சந்திப்பில், வடமாகாண கல்வி அபிவிருத்திக்குழு தலைவர் இரா.செல்வ வடிவேல், அமைச்சரின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .