2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

நாயன்மார்கட்டில் சிறுவர் கிராமம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 06 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


எஸ்.ஓ.எஸ். நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் 'சிறுவர் கிராமம்' என்னும் சிறுவர் காப்பகம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது திறக்கப்பட்ட  6ஆவது சிறுவர் கிராமம் இதுவாகும். இது 257 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

இந்தச் சிறுவர் கிராமத்தில்  செட்டிகுளம் மெனிக்பாம் முகாமிலிருந்த பெற்றோர்களை இழந்த 97 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே அநுராதபுரம், நுவரொலியா, மொனராகலை, பிரிந்தல, காலி உள்ளிட்ட இடங்களில் சிறுவர் கிராமங்களை எஸ்.ஓ.எஸ். நிறுவனம் அமைத்து செயற்படுத்தி வருகின்றது.

ஒஸ்திரியா நாட்டினைச் சேர்ந்த எஸ்.ஓ.எஸ் நிறுவனம் சர்வதேச ரீதியில் 133 சிறுவர் கிராமங்களை அமைத்துள்ளன. 

இந்த நிகழ்வில், சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எஸ்.ஓ.எஸ் நிறுவனத்தின் ஆசியக்கண்டத்திற்கான பிரதிச் செயலாளர் நாயகம் சுபா மூர்த்தி, எஸ்.ஓ.எஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான இயக்குநர் ஆனந்த கருணாரட்ன, பிரதி தேசிய இயக்குநர் வாகர் ரட்ணதுரை, எஸ்.ஓ.எஸ் நிறுவனத்தின் இலங்கை இயக்குநர் சபையின் தலைவர் சந்தியா வீரசிங்க மற்றும் இலங்கையிலுள்ள சிறுவர் கிராமங்களின் இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .