2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எஸ்.கே.பிரசாத்

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த யாழ். தெல்லிப்பழையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான சரவணபவன் கஜமாறன் (வயது 26) இன்று புதன்கிழமை அதிகாலை  உயிரிழந்துள்ளதாக  அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க  தெரிவித்தார்.

கடந்த 10ஆம் திகதி அச்சுவேலியிலிருந்து நெல்லியடிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இவரது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவரது வீட்டில் நாளை வியாழக்கிழமை   பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் இறுதிக்கிரியை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .