2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு 'ஆவா' குழு அச்சறுத்தல்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஐவர்  முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

 ஆவா குழுவினரின் வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பதில் நீதவான் எம். திருநாவுக்கரசு அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற வாசலில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் ஆவா குழுவை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதனைத் தடுக்க முற்பட்ட ஆவாகுழுவைச் சேர்ந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று மிரட்டியுள்ளதோடு 'உங்கள் அனைவரையும் எமக்குத் தெரியும் உங்கள் வீடுகளும் தெரியும் உங்கள் அனைவரையும் வெட்டுவோம்' என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

உடனடியாக ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .