2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் புதிய ஊடகவியலாளர் கழகம்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் தங்குமிடம், மற்றும் இணைய வசதிகள் கொண்ட புதிய ஊடகவியலாளர் கழகம் ஒன்று விஞ்ஞான தொழில்நுட்ப விவகார அமைச்சர் பேரரிசிரியர் திஸ்ஸ விதாரணவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கவுன்சிலர் ஜெனரல்  வே.மகாலிங்கம் , தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் எஸ்.ஆனந்தராஜ், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கழகத்தில் உடற்பயிற்சிக் கூடம், இணையப் பயன்பாட்டிற்கான வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .