2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் சாரதி கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -செல்வநாயகம் கபிலன்


யாழ். வளலாயிலிருந்து அச்சுவேலிப் பகுதிக்கு சட்டவிரோதமாக கன்டர் ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற முதிரை மரக்குற்றிகளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் சாரதியை கைதுசெய்ததாகவும் அச்சுவேலி குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரி கே.எம்.சி.பிரதீப் தெனவிரட்ண தெரிவித்தார்.

சந்தேக நபரை இன்று புதன்கிழமை காலை பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் அவர் கூறினார்.

மரக்குற்றிகள் கொண்ட கன்டர் ரக வாகனத்துடன் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில்  கிடைத்த தகவலைத் தொடர்ந்து  குறித்த வாகனத்தைச்; சோதனையிட்டபோது, இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .