2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் ஆமை இறைச்சி விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 22 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். திருநெல்வேலிச் சந்தைக்கு அருகில் ஆமை இறைச்சி விற்பனை செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படும் குருநகரைச் சேர்ந்த றெஜினோல்ட் ஷிரமேட் (வயது 35) என்பவரை இன்று புதன்கிழமை காலை கைதுசெய்ததுடன்,  அவரிடமிருந்து 10 கிலோ ஆமை இறைச்சியை  கைப்பற்றியதாகவும் யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சைக்கிளில் கொண்டுவந்து ஆமை இறைச்சியை விற்பனை செய்துகொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

ஆமை இறைச்சியுடன் சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .