2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். புத்தூர் பகுதியிலிருந்து சுன்னாகத்திற்கு அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச்சென்ற சிறிய ரக உழவு இயந்திரத்தை மணலுடன் நேற்று புதன்கிழமை  இரவு கைப்பற்றியதுடன், சாரதியையும்  கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப்பிரிவு உபபொலிஸ் அதிகாரி பி.கே.எஸ்.எ.ரோகண தெரிவித்தார்.

பொலிஸ் பிணையில் இன்று வியாழக்கிழமை காலை விடுவித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், சிறிய ரக உழவு இயந்திரத்தை மறித்துச் சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரமின்றி  மணல் ஏற்றி வந்தமை தெரியவந்ததாகவும் அவர் கூறினார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .