2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் வயோதிபர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மனோகராச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாசியப்பிட்டியைச் சேர்ந்த அடிசன் இராசகுமார் (வயது 54) என்பவர் மரணமடைந்ததாக  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார்  தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை (25) இரவு இவரின் மோட்டார் சைக்கிளும் கன்டர் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.
படுகாயமடைந்தவரை  உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்;தபோதிலும், அவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது, கன்டர் ரக வாகனத்துடன் தப்பிச்சென்ற  சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர். 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .