2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி பசுவை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் கைதான நால்வர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 27 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாதகல்  பகுதியிலிருந்து வட்டுக்கோட்டை, சங்கரத்தைக்கு அனுமதிப்பத்திரமின்றி கன்டர் ரக வாகனத்தில்  பசுமாடு ஒன்றை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 04 பேரையும் பொலிஸ் பிணையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) விடுவித்ததாக  இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுகோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்களான பொன்னையா பத்மநாதன் (வயது 35), நவரத்தினம் செல்வராசா (வயது 46), மகாலிங்கம் பிரபாகரன் (வயது 26), குமாரகுரு குலசேகரன் (வயது 33) ஆகியோரே மேற்படி குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (25)  இரவு கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து அப்பசு மாட்டை மீட்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

இவர்களை நாளைமறுதினம் புதன்கிழமை (29)   மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த பகுதியில் போக்குவரத்துக் கடமையில்  ஈடுபட்டிருந்த பொலிஸார், மேற்படி வாகனத்தை மறித்துச் சோதனையிட்டபோது பசுமாடு ஏற்றிச்செல்வதற்குரிய அனுமதிப்பத்திரம் இல்லாமை தெரியவந்தது.

அத்துடன், இவர்கள் பசுமாட்டின் 02 கால்களையும் கட்டிவைத்து வாகனத்தில் கொண்டு சென்றதால் மிருக வதைச்  சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .