2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் அலைய முடியாது: சிவாஜிலிங்கம்

Kogilavani   / 2014 ஜனவரி 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'வடமாகாணத்திலுள்ள பொலிஸாருடன் எங்களால் மல்லுகட்ட முடியாது. அந்தவகையில், பொலிஸ் அதிகாரத்தினை வடமாகாண சபையினால் உருவாக்க முடியாதா? அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் அலைய முடியாது' என வடாமகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செவ்வாய்க்கிழமை  (28) தெரிவித்தார்.

வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்குமான இருநாள் செயலமர்வு திங்கட்கிழமை (27) ஆரம்பமாகி செவ்வாயக்கிழமையும் (28) தொடர்ந்து நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் கூற்றுக்கு பதிலளித்த செல்வகுமரன், 'ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் சட்டத்திற்கு முரணாக எதுவும் செய்ய முடியாது'  என்றார். 

இந்தச் செயலமர்வில் யாழ்.பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்.செல்வகுமரன் 'மாகாண மட்டத்தில் அரசியலமைப்பில் ஜனநாயகம்' என்னும் தொனிப்பொருளில் கருத்துக்களை வழங்கினார்.

தொடர்ந்து 'மாகாண நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில் இலங்கை நிர்வாக சேவையின் இளைப்பாறிய சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒஸ்ரின் பெர்னான்டோ கருத்துக்களை வழங்கினார்.

இச்செயலமர்வில், சுவிஸ் தூதரக அதிகாரி டேவிட், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை  உறுப்பினர்கள், வடமாகாண உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .