2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சுன்னாகத்தில் புகைப் பரிசோதனை நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

லாப் காஸ் நிறுவனத்தின் வாகனங்களை பரிசோதனை செய்வதற்கான இரண்டாவது புகைப் பரிசோதனை நிலையம் சுன்னாகத்திலுள்ள இலங்கை தேசிய சேமிப்பு வங்கிக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

லாப் காஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமயந்த தர்மஸ்ரீவர்த்தன, செயற்பாட்டு முகாமையாளர் நளின் திஸாநாயக்கா, மனிதவள அலுவலர் டெறிக் பெரேரா, திட்ட முகாமையாளர் சாலிய திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டு இப்புகைப் பரிசோதனை நிலையத்தின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்கள்.

குறித்த புகைப்பரிசோதனை நிலையத்தில் வார நாட்களில் தினமும் காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிவரையிலும் பொதுமக்கள் சேவைகளைப் பெறமுடியும் என்று பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

ஏற்கனவே யாழ். கோவில் வீதியில் இந்நிறுவனத்தின் நிலையான அலுவலகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள வாகனங்கள் அனைத்தும் புகைப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே தற்போது வாகனக் காப்புறுதி மற்றும் வீதி வரி பத்திரம் ஆகியவற்றினைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .