2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'நிதிகிடைக்கும் பட்சத்தில் கிளிநொச்சி நகர பேரூந்து நிலையம் அமைக்கப்படும்'

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 'நகர திட்டமிடலுக்கு அமைவாக கிளிநொச்சியில் புதிய மாவட்ட செயலகம், சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  அதேபோல், நிதி கிடைக்கும் பட்சத்தில் கிளிநொச்சி நகரத்திற்கான பேரூந்து நிலையமும் அமைக்கப்படும்'  என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் புதன்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரிற்கான பேரூந்து நிலையம் அமைப்பதற்குரிய இடத்தினை தெரிவு செய்வதில் ஏற்பட்டு வருகின்ற இழுபறி நிலை காரணமாக கடந்த நான்கு வருடங்களாக பேரூந்து நிலையம் அமைக்கப்படாமல் காணப்படுகின்றது. இதனால், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'1968 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபையினால் கிளிநொச்சி சாலைக்கென பத்து ஏக்கர் காணி வழங்கப்பட்டது. 

கடந்த 2010ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னரான மீள்;குடியேற்றத்தின்போது மீளவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை இயங்க ஆரம்பித்த நிலையில் அதற்குரிய காணிகள் பல்வேறு வகையிலும் சுவீகரிக்கப்பட்டு குறிப்பிட்ட சிறிய காணித்துண்டே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நகரதிட்டமிடல் கூட்டத்தில் பேரூந்து நிலையம் ஓரிடத்திலும் பேரூந்து சாலை புதுமுறிப்புப் பகுதியிலும் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு, இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சிச்சாலைக்கு தெரிவிக்கப்பட்டிருந்;தது' என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .