2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உகண்டா பாதுகாப்புச் செயலர் யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 30 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்


உகண்டாவின் பிரதம பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி, இன்று (30) யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது அவரை யாழ். மாவட்ட இராணுவ  தளபதி உதய பெரேரா வரவேற்றார்.

இரு நாடுகளிடதும் நட்புறவினை ஏற்படுத்தும் முகமாகவே இடம்பெற்ற இந்த விஜயத்தில் ஓடொன்கோ ஜெஜியுடன் 6பேர் உள்ளடங்கிய குழுவொன்று இந்த கலந்துகொண்டுள்ளது.

இக்குழுவினர், யாழ். கட்டளைத் தளபதியுடன் பலாலியிலுள்ள படைத் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டனர்.

கட்டளைத் தளபதியுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, ஓடொன்கோ ஜெஜி குழுவினர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளதுடன், தொடர்ந்து யாழ்.பொது நூலகத்தினையும் பார்வையிடவுள்ளதாக பலாலி இரர்ணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .