2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நிஷா தேசாய் பிஸ்வால் - யாழ். ஆயர் சந்திப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்  இன்று சனிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையினை ஆயர் இல்லத்தில் இன்று காலை 9 மணிக்குச் சந்தித்து கலந்துரையாடினார்.

இவருடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே.சிசனும் வருகை தந்திருந்தார்.

ஆஜர் உடனான சந்திப்பினைத் தொடர்ந்து யாழிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு செல்லவிருப்பதுடன்,  யாழ்.சிவில் அமைப்பினர், மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரினைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .