2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நிஷா தேசாய் பிஸ்வால் நல்லூரில் வழிபாடு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற தெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு இன்றுக்காலை விஜயம் செய்ததுடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு இன்றுக்காலை விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் நீதித்துறை அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை நேற்று சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .