2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

படையினரின் சீருடையில் நடமாடியவர் கைது

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இராணுவ சீருடையை ஒத்த உடையில் நடமாடிய ஆசாமியை நேற்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், பேரூந்து நிலையத்தில் இராணுவ சீருடையை ஒத்த உடையில் அங்குமிங்கும் நடமாடித் திரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனை அங்கு கடமையிலிருந்த பொலிஸாரும் அவதானித்ததையடுத்து குறித்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .