2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கியவருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., மருதங்கேணி, வத்திராயன் பகுதியில் 15 கிலோ கடலாமையை இறைச்சியாக்கிக் கொண்டிருந்தவர் எனக்கூறப்படும் அதேயிடத்தினை சேர்ந்த கந்தையா மனோகரன் (45) என்பவருக்கு 50,000 ரூபா சரீரப்பிணையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.கஜநிதிபாலன் விடுவித்தார்.

குறித்த நபரை இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே, நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார்.

மேற்படி நபர் கடலாமை ஒன்றினை நேற்று (04) இறைச்சியாக்கிக் கொண்டிருக்கின்றார் என பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் கடலாமையின் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .