2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த மூவருக்கு சரீரப் பிணை

Super User   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கஞ்சா வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்ட சாவகச்சேரி, ஆடியம்பிட்டியினை சேர்ந்த மூவரையும் இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்று அனுமதியளித்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் திங்கட்கிழமை குறித்த நபர்கள் கஞ்சாவை நுகர்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 38, 19, 18 வயதான குறித்த நபர்களை கைதுசெய்துடன், அவர்களிடமிருந்த 05 மில்லி கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த நபர்களை நேற்று சாவகச்சேரி நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போதே, நீதிபதி மேற்கண்டவாறு தீர்ப்பளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .