2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கால்நடைகளுக்கு சினைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தினால்; உடுவில் பிரதேசத்திலுள்ள கால்நடைகளுக்கான செயற்கை முறையிலான சினைப்படுத்தும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்;டுள்ளதாக உடுவில் பிரதேச கால்நடை வைத்தியதிகாரி ரி.விமலகுமார் இன்று (09) தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக கால்நடைகளுக்கு பரவிய கால்வாய் நோய் காரணமாக செயற்கை முறையில் சினைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இருந்தும், தற்போது கால்வாய் நோய் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் சினைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி கால்வாய் இந்தியா தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .