2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கியவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை, சீனிப்பந்தல் பகுதியிலுள்ள வீடொன்றில் கடலாமையை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை 50,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷPர் மொஹமட்  ஞாயிற்றுக்கிழமை (09) விடுவித்தார்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் கடலாமையை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டின் பேரில்   அன்ரன் செல்லக்குமார் (வயது 30) என்பவரை சனிக்கிழமை (08) கைதுசெய்ததுடன், இவரிடமிருந்து கடலாமை இறைச்சியை கைப்பற்றியதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக  நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.



 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .