2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் தாயும் மகளும் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், கனகரத்தினம் கனகராஜ்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந் சாதனா என்ற தாயும் 03 வயதான  ஆனந் யதுசிகா என்ற அவரது மகளும் மரணமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார்  தெரிவித்தனர்.

அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த  ரதி என்ற பெண் புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்  எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு புறப்பட்டபோது, எதிரே வந்த கன்டர் ரக வாகனம்  மோதி  விபத்து சம்பவித்ததாகவும் இதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கன்டர் ரக வாகனச் சாரதியை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .