2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சுதந்திரதினத்தன்று மது விற்றவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுதந்திரதினமான பெப்ரவரி 04ஆம் திகதி  மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன்  புதன்கிழமை  7,500 ரூபா தண்டம் விதித்தார்.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை (12)  ஆஜர்படுத்தியபோதே, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

யாழ். உடுப்பிட்டி, இமையாணன் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவர்  அவரது வீட்டில் மதுபானம் விற்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, மேற்படி நபரிடமிருந்து  சாராய போத்தலொன்றைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .