2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது இனம்தெரியாதோர் தாக்குதல்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா ,எஸ்.கே.பிரசாத்

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரான யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த எஸ்.சந்திரசேகரன் (23) மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த பொலிஸார் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று (13) தெரிவித்தனர்.

இது தொடர்பாக குறித்த பொலிஸார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், அவரை வைத்தியாசலையில் சிகிச்சைப் பெறுமாறும் அறிவுறுத்தியதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நேற்று (12) தனது வீட்டிற்கு அருகாமையிலிருக்கும் கடையொன்றில் தனது நண்பர் ஒருவருடன் கதைத்துக்கொண்டிருந்த வேளையில், அப்பகுதியில் இருந்த சில இனம்தெரியாத நபர்கள் இவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .