2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலில் நீராடியவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறைக் கடலில் வெள்ளிக்கிழமை (14) நீராடிக்கொண்டிருந்த சாரையடி தெற்கைச் சேர்ந்த கோகுலராஜா பிரசாத் (வயது 15) என்பவர் சுழியில் சிக்கி உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எ.எ.டபிள்யூ.ஜெ.எஸ்.அபயக்கோன் தெரிவித்தார்.

இவர் தனது 05  நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.

சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்ட பொலிஸார்,  பிரேத பரிசோதனைக்காக  சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவன் யா/புற்றாளை மகா வித்தியாலயத்தில் தரம் 10  இல் கல்வி பயின்று வருபவர் ஆவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .