2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ்.மாவட்ட கிராம அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்ட கிராம அலுவலர் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தி.நித்தியானந்தன் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற புதிய அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டத்திலே புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி சங்கத்தின் தலைவராக கரவெட்டி பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த தி.வரதராசாவும், உபதலைவராக நல்லூர் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த ந.தர்மகுணசீலனும், செயலாளராக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த தி.நித்தியானந்தனும், உபசெயலாளராக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த சு.விஜயரெட்ணமும், பொருளாளராக ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த வி.ஆர்.சி.சுதர்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் தலா ஒவ்வொரு நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X