2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நான்காயிரத்து ஐந்நூறு ரூபா பெறுமதியான 09 போதைப்பொருள் பொதிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும்  யாழ். கல்வியங்காட்டைச்  சேர்ந்த 25 வயதான ஒருவரை ஐந்துசந்திப் பகுதியில் புதன்கிழமை  (26) மாலை கைதுசெய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து  போதைப்பொருளைக் கொண்டுவந்து, தனது நண்பர்களுடன் நுகர முற்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய விசேட அதிரடிப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X