2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீள்குடியேறியோரின் தகவல்கள் திரட்டல்

Menaka Mookandi   / 2014 மார்ச் 02 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மீள்குடியேற்ற அமைச்சினால், யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான மலசகூடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக மீள்குடியேறியவர்களின் தகவல்கள் கிராமஅலுவலர்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை பற்றிய விபரங்கள் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளரினால் யாழ். மாவட்டச் செயலகத்தினூடாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலகங்கள் அந்தந்த கிராம அலுவலர்கள் மூலம் மீள்குடியேற்றிய மக்களின் விபரங்களைத் திரட்டி வருகின்றனர்.

இந்த விபரங்களை திரட்டுவதில் அந்தந்தக் கிராமங்களின் மீள்குடியேற்ற அமைப்புக்கள் மற்றும் சங்கங்கள் ஆகியன இணைந்து கிராமஅலுவலருக்கு உதவியாகச் செயற்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .