2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆசிரியை தொலைபேசியில் தொந்தரவு செய்தவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 02 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பத்தமேனியினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை கடந்த இரண்டு மாதங்களாக தொலைபேசியில்; தொந்தரவு செய்ததுடன், ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை குறித்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று அடாவடி செய்த புத்தூர் நவக்கிரியினைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் குறித்த ஆசிரியையை கடந்த இரண்டு மாதங்களாக காதல் செய்யும்படி தொலைபேசியில் தொந்தரவு செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நபரின் தொந்தரவு தாங்க முடியாமல் ஆசிரியை குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பு வருவதினை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் நிறுத்தியுள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்த அந்நபர், இன்று (02) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியையின் தந்தை அந்நபரினை பிடித்து அடித்ததுடன், அச்சுவேலிப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியதையடுத்து கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.

குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .