2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தண்டவாள இரும்புத் துண்டுகளை வாகனத்தில் ஏற்றிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பழைய தண்டவாளத்திற்கான இரும்புத் துண்டுகளை  வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதற்கு முற்பட்டதாகக் கூறப்படும்  இருவரை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு  கைதுசெய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். தெல்லிப்பழை பகுதியில் புகையிரதப்பாதை தற்போது புனரமைக்கப்படுகின்றது. இந்நிலையில், அங்கு அகற்றப்பட்ட பழைய தண்டவாளங்களை இவர்கள் இருவரும்  வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்களை கைதுசெய்ததுடன், குறித்த வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .