2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விடுதிகளில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகரசபையின் அனுமதி பெறாமல் யாழ். அரியாலை ஆனந்தன் கடை வீதியில் இயங்கிவந்த விடுதியிலும் யாழ். அம்மன் வீதியில் இயங்கிவந்த மசாஜ் நிலையத்திலும் கைதுசெய்யப்பட்ட 08 பேரில்  பெண்கள் மூவரையும்  ஆண்கள் இருவரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், ஏனைய 02  பெண்கள் மற்றும்  ஆண் ஒருவரின்  வழக்கை செவ்வாய்க்கிழமை (04) விசாரணைக்கு  எடுத்துக்கொள்வதாகவும்  நீதவான் கூறினார்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (03) ஆஜர்படுத்தியபோதே நீதவான் உத்தரவைப் பிறப்பித்தார்.

மேற்படி இரு விடுதிகளையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 08 பேரை கைதுசெய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் விடுதி முகாமையாளர்கள் இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் அநுராதபுரம், மாத்தளை, கிளிநொச்சி,  யாழ். உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  

வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸின் உத்தரவுக்கமைய சென்ற பொலிஸ் குழுவினர் இம்முற்றுகையை மேற்கொண்டனர்.

இம்முற்றுகை நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் உள்ளிட்டவர்களும் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .