2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முன்பள்ளிக்கான இடத்தினை தெரிவு செய்யுமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். மீசாலை மேற்கில் முன்பள்ளி அமைப்பதற்கு உரிய இடத்தினை பொதுமக்கள் தெரிவு செய்து தரும் பட்சத்தில் அதற்குரிய நிதியினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் அ.பாலமயூரனின் ஏற்பாட்டில் மீசாலை மேற்கு கிராம மக்களுக்கான அபிவிருத்திக்கான கலந்துரையாடல் மலைமகள் சனசமூக நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வீதி அமைத்தல், மின்சாரம். குடிதண்ணீர் வசதி, வீடமைப்புத்திட்டம் போன்றவற்றின் முன்னுரிமை அடிப்படையில் 15 குடும்பங்களைக் கொண்ட கெட்டன்பிட்டி கிராமம் தெரிவு செய்யப்பட்டு, அதனை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த திட்டங்கள் தொடர்பாக அந்தந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக அவர் இதன்போது கூறினார்.  

இதேவேளை, குறித்த பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு விழிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .