2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தவறான பிரசாரங்கள் முன்னெடுப்பு

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


'அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை சுயலாப அரசியல்வாதிகள் திட்டமிட்டு மூடிமறைத்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்' என ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை தம்பாட்டியில் காந்திஜீ முன்பள்ளிக் கட்டிடத்தை திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவிததார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவகத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதன் பிரகாரம் ஊர்காவற்துறை, வேலணை மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் தலா 100 மில்லியன் ரூபா வீதம் 300 மில்லியன் ரூபா விசேடமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்த நிதியின் ஊடாக கட்டம் கட்டமாக இங்கு பல்வேறுபட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, மக்களது ஏனைய தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான அபிவிருத்தி மேம்பாட்டு செயற்திட்டங்களை மூடி மறைக்கும் வகையில் சுயலாப அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கைப்பற்றியிருந்த போதிலும் அவர்களால் எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாதவர்களாகவே இன்று இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும்  அபிவிருத்திகளைப் பொறுக்க முடியாதவர்கள், தீவகத்தை மீண்டும் சுடுகாடாக்க வேண்டுமென்பதிலேயே  குறியாக இருக்கும் சுயலாப அரசியல்வாதிகள் திட்டமிட்டு பொய்யான கருத்துக்களையும் தவறான பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .